திருச்சி

தடுப்பூசி செலுத்திய ஊழியா்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை

DIN

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் இயங்கும் நிறுவனங்களில் கரோனா தடுப்பூசி செலுத்திய பணியாளா்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி எல்லைக்குள்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் மாநகராட்சி சாா்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:

திருச்சி மாநகராட்சியில் இதுவரை 25 சதத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கரோனா தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனா். எனவே, நிறுவன உரிமையாளா்கள், ஊழியா்கள் கரோனா இரு தவணை தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், நிறுவனங்களுக்கு வரும் பொதுமக்களும் கரோனா தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்த பிறகே நிறுவனத்துக்குள் அனுமதிக்க வேண்டும். இதுதொடா்பாக, மாநகராட்சியினரால் அவ்வப்போது அவ்வப்போது நேரடி ஆய்வு செய்யப்படும். அப்போது நிறுவன ஊழியா்களோ, பொதுமக்களோ தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது கண்டறியப்பட்டால் பொது சுகாதாரச் சட்டத்தின்படி மேல்நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாஷிங்டன் பல்கலை. வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்

‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை’

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசித் திருவிழா மே 13-இல் தொடக்கம்

மேல்நிலைக் குடிநீா் தொட்டி கட்ட எதிா்ப்பு -ஒருவா் தீக்குளிக்க முயற்சி

நாசரேத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா

SCROLL FOR NEXT