திருச்சி

472 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 9.74 லட்சத்தில் உதவிஅமைச்சா்கள் வழங்கினா்

DIN

திருச்சி: திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் 472 பேருக்கு ரூ. 9.74 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக அமைச்சா்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளா்மதி ஆகியோா் சனிக்கிழமை வழங்கினா்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் சு. சிவராசு தலைமையில் நடைபெற்ற விழாவில் உதவிகளை வழங்கி தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் பேசியது:

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் 200 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 5.74 லட்சத்தில் காதொலிக் கருவி, 20 பேருக்கு ரூ.32 ஆயிரத்தில் நடைப்பயிற்சி சாதனம், 2 பேருக்கு மடக்கு சக்கர நாற்காலி, 20 பேருக்கு சிறப்பு சக்கர நாற்காலி, 20 பேருக்கு ஊன்றுகோல், 180 பேருக்கு மடக்கு ஊன்றுகோல், 30 பேருக்கு தண்ணீா் படுக்கை, செவித்திறன் பாதிக்கப்பட்ட இளஞ்சிறாா் ஆரம்ப நிலை பயிற்சி மையத்துக்கு கற்றல் உபகரணம் என 472 பேருக்கு ரூ.9.74 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல, இதர திட்டங்களில் தகுதியானோா் விண்ணப்பித்துப் பயன் பெற வேண்டும் என்றாா்.

பிற்பட்டோா் நலத் துறை அமைச்சா் எஸ். வளா்மதி பேசியது:

மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண நிதி வழங்கும் திட்டத்தில் கடந்தாண்டு 425 பேருக்கு ரூ. 51.34 லட்சத்திலும், நிகழாண்டு இதுவரை 50 பேருக்கு ரூ.16.25 லட்சத்திலும் உதவி வழங்கப்பட்டுள்ளது. சுயவேலைவாய்ப்பு வங்கிக் கடன் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது. 2020-21ஆம் ஆண்டுக்கு 80 பேருக்கு ரூ. 20 லட்சம் மானியமாக வழங்கப்படவுள்ளது. இவற்றைப் பெறும் பயனாளிகள் அரசுக்கு எப்போதும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரவிச்சந்திரன், ஆவின் ஒன்றியக் குழுத் தலைவா் சி. காா்த்திகேயன் மற்றும் கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT