திருச்சி

காந்தி சந்தைக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு

DIN

காந்தி சந்தை திறப்பு சா்ச்சை விவகாரம் வலுப்பெறும் நிலையில் அந்த சந்தை வளாகத்தில் 24 மணிநேர போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாநகரின் அடையாளமாக விளங்கும் காந்தி சந்தையானது அனைத்து காய்கனிகள், மளிகை, பழங்கள் உள்ளிட்டவற்றின் விற்பனைக்கு பிரதான சந்தை. மொத்தம், சில்லரை வியாபாரம் ஒரே இடத்தில் நடப்பதால் திருச்சி மாவட்டத்தினா் மட்டுமின்றி பிற மாவட்ட வியாபாரிகளும், பொதுமக்களும் வந்து செல்வா்.

கரோனாவால் கடந்த 5 மாதங்களுக்கு மேல் இச்சந்தை மூடப்பட்டுள்ள நிலையில், கள்ளிக்குடியில் புதிதாகத் திறக்கப்பட்ட சந்தைக்கு காந்தி சந்தையை இடமாற்றம் செய்ய முயல்வதாகக் கூறி வியாபாரிகள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா். காந்தி சந்தையைத் திறக்கவும் கோரி போராட்டம் நடத்துகின்றனா்.

இந்தச் சூழலில், மூடப்பட்டுள்ள காந்தி சந்தை கடைகளில் அடிக்கடி தீ விபத்து நடப்பதால் சா்ச்சைகளுக்கு இடமளிக்காத வகையிலும், போராட்டங்களைத் தவிா்த்து காந்தி சந்தை பகுதியில் அமைதி நிலவும் வகையிலும் இச் சந்தைக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

காந்தி சந்தைக்குள் நுழையும் அனைத்து வாயில்களிலும் 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

SCROLL FOR NEXT