திருச்சி

10, 12-ம் வகுப்பு தனித் தேர்வர்கள்: திருச்சி மாவட்டத்தில் 104 பேர் தேர்வு எழுகின்றனர்

21st Sep 2020 12:10 PM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெறும் 10, 12-ம் வகுப்பு தனித் தேர்வில்12 மையங்களில் 104 பேர் எழுதுகின்றனர்.

கரோனா பொது முடக்கத்தால் நடைபெறாத 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தனித் தேர்வர்கள் மற்றும் 12-ம் வகுப்பு தனித் தேர்வர்கள் இன்று தேர்வு எழுதுகின்றனர்.

இதன்படி, திருச்சி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் (உடல் ஊனமுற்றோர், செவித்திறன் இல்லாத, மூளைத்திறன் குறைந்த) திருச்சியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 7 மைங்களில் 86 பேரும் 12-ம் வகுப்பு தேர்வை 5 மைங்களில் 18 பேரும் எழுதுகின்றனர்.

ஒரு தேர்வறையில் தேர்வர்கள் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

ADVERTISEMENT

Tags : trichy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT