திருச்சி

அவசர சட்டங்களை எதிர்த்து மணப்பாறை கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

4th Sep 2020 07:37 PM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், மத்திய மாநில அரசுகளின் அவசர சட்டங்களை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நகர செயலாளர் ஜனசக்தி உசேன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மின்சாரம், அத்தியாவசிய பொருட்கள், சுற்றுப்புறசூழல், ஒப்பந்த விவசாயம், வேளாண் விலை பொருட்கள், வணிக ஊக்குவிப்பு, சாமானியர்களில் படிப்புரிமை பறிக்கும் புதிய கல்வி கொள்கை அறிமுகம் மற்றும் சட்டத்திருத்தங்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலேயே அவசர சட்டங்களாக நிறைவேற்றும் மத்திய அரசும், அதற்கு துணை போகும் மாநில அரசும் தங்களது நிலைபாட்டை கைவிட வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக மத்திய மாநில அரசுகளின் அவசர சட்டங்களை எதிர்த்து  புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை வீடு வீடாக சென்று துண்டுப் பிரசுரங்கள் அளித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டனர்.

இதில் புறநகர் மாவட்ட செயலாளர் த.இந்திரஜித் விளக்கவுரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் எ.செளகத் அலி, பி.சின்னத்துரை, ஆர்.நல்லுச்சாமி, எல்.மரியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ADVERTISEMENT

Tags : Trichy
ADVERTISEMENT
ADVERTISEMENT