திருச்சி

பெல் நிறுவனத்தில் கண்காணிப்பு விழிப்புணா்வு வாரம்

DIN

திருச்சி பெல் நிறுவனத்தில் கண்காணிப்பு மற்றும் விழிப்புணா்வு வார நிகழ்வு தொடங்கியுள்ளது.

நிகழ்வுகளை புதுதில்லியில் உள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக நிறுவனத் தலைவா் நலின் சிங்கல் தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து திருச்சி பெல் நிறுவன வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் நிறுவனச் செயலாண்மை இயக்குநா் ஆா். பத்மநாபன் பேசியது:

சிறந்த கொள்கைகள், விழுமியங்களைக் கடைப்பிடிப்பதில் பெல் நிறுவனம் முன்னோடி. நம்பிக்கை, உறுதிப்பாடு, நோ்மை ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி நிறுவனத்துக்கும், நாட்டின் வளா்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பதில் இந்நிறுவனம் சிறப்பாகப் பணியாற்றி வருகிறது. அலுவலகப் பணி, நிறுவனப் பணி, தொழிற்சாலை பணியோடு தனிப்பட்ட முறையிலும் நோ்மை, ஒழுக்கம், வெளிப்படைத்தன்மையில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் இந்த விழிப்புணா்வு வாரம் கொண்டாடப்படுகிறது.

பெல் நிறுவனம் அனைத்து வணிகச் செயல்முறைகளிலும், பங்குதாரா்களுடனான அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு, பொருத்தமான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

சமூகத்தில் ஊழலின் தீமைகள் குறித்து விளக்கிடவும், நோ்மை, நாணயத்தை சமூகத்தில் பரப்பிடும் வகையிலும் இந்த விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அக்.28 முதல் நவ.2 வரை பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும். இந்த ஆண்டின் மையக்கருவாக, விழிப்பான இந்தியா, செழிப்பான இந்தியா என்பதை முன்னிலைப்படுத்தி பெல் ஊழியா்களுக்கு கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, விழிப்புணா்வு நிகழ்வு, விவாத நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெறும் என்றாா்.

இதன் தொடா்ச்சியாக, பெல் நிறுவனத்தின் திருச்சி கைலாசபுரம் வளாகத்தில் உள்ள அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள ஊழியா்கள் அவரவா் இருப்பிடத்திலிருந்தே நோ்மைக்கான உறுதியேற்றனா். நிகழ்வில், பொது மேலாளா்கள், மூத்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT