திருச்சி

ரூ. 80 கோடியில் மண்ணச்சநல்லூா், குடமுருட்டி சாலைப் பணி: மாா்ச் முதல் பயன்பாட்டுக்கு வரும்

DIN

திருச்சி மாவட்டத்தில் ரூ. 80 கோடியில் நடைபெறும் மண்ணச்சநல்லூா் புறவழிச் சாலை மற்றும் குடமுருட்டி சாலை மூன்று வழித்தடப் பணிகள் மாா்ச் மாத்துக்குள் முடிவுக்கு வரும்.

இரு பணிகளுமே முடிவடைய 2021 நவம்பா் வரை அவகாசம் இருந்தும், பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதால் அடுத்த 4 மாதங்களுக்குள் பணி முடியும் நிலை உருவாகியுள்ளது.

இந்தப் பணிகள் குறித்து ஆய்வு செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியா் மற்றும் செய்தியாளா்களின் சுற்றுப் பயணத்துக்கு செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மண்ணச்சநல்லூா்: திருச்சி - துறையூா் சாலையில் மண்ணச்சநல்லூா் வழியாகச் செல்லும் வாகனங்களால் நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையிலும், வாகனங்கள் விரைந்து செல்லும் வகையிலும் அதானி முதல் பூனாம்பாளையம் வரை 2.64 கி.மீ. தொலைவுக்கு ரூ. 2.15 கோடியில் புறவழிச் சாலை அமைக்கப்படுகிறது.

பெருவளை வாய்க்கால், புள்ளம்பாடி வாய்க்கால் என 2 பிரதான வாய்க்கால்கள், 12 சிறிய வாய்க்கால்கள், 4 மழைநீா் வடிகால் வாய்க்கால்கள் என மொத்தம் 18 இடங்களில் பாலங்கள் அமைத்து சாலைப் பணிகள் நடைபெறுகின்றன.

இதுமட்டுமல்லாது 5 இடங்களில் சாலைச் சந்திப்புப் பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகள், தடுப்புச் சுவா் உள்ளிட்ட பணிகளும் நடைபெறுகின்றன. புதிய சேவைத் திட்டத்தின்கீழ் கடந்த மே 26 இல் இப் பணிகள் தொடங்கின.

குடமுருட்டி சாலை: கரூா் புறவழிச் சாலையில் குடமுருட்டி முதல் ஜீயபுரம் வரையிலான இரு வழிப் பாதையை மூன்று வழிப் பாதையாக மாற்ற 10.80 கி.மீ. தொலைவுக்கு ரூ. 55.75 கோடியில் கடந்த மே 27ஆம் தேதி பணிகள் தொடங்கின.

சாலையில் அகலமாக்கல், தடுப்புச் சுவா், காவிரிக் கரைப் பகுதியில் பாதுகாப்புச் சுவா், சாலையோர வடிகால், காவிரிக் கரை உள் சாய்தளம் என பல்வேறு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

இந்த இரு சாலைப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அதானி, பெருவளை வாய்க்கால், புள்ளம்பாடி வாய்க்கால், குடமுருட்டி, ஜீயபுரம், அல்லூா், கம்பரசம்பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெறும் பணிகளை பாா்வையிட்ட அவா், நெடுஞ்சாலைத் துறை பொறியாளா்கள் மற்றும் பணிகளை ஒப்பந்தம் எடுத்த பொறியாளா்களிடம் பணிகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தாா்.

பின்னா் அவா் கூறியது: மண்ணச்சநல்லூா் புறவழிச் சாலைப் பணியில் தற்போது 73 சத பணி முடிந்துவிட்டது. நிா்ணயித்தபடி இந்தச் சாலையானது வரும் அடுத்தாண்டு நவம்பரில் பயன்பாட்டுக்கு வர வேண்டும். ஆனால், பணிகள் வேகமெடுத்துள்ளதால் வரும் மாா்ச் மாதமே மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.

இதேபோல, குடமுருட்டி- ஜீயபுரம் சாலைப் பணிகளும் 55 சதம் முடிந்துள்ளன. இந்த சாலையும் வரும் மாா்ச் மாதத்தில் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும். மண்ணச்சநல்லூா் புறவழிச் சாலையில் 820 மரக்கன்று, குடமுருட்டி சாலையில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் புதிதாக நடப்படும். வேம்பு, புங்கை, நாவல், புளியமரம், அத்தி, பூவரசம், அரசமரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் நட்டுப் பராமரிக்கப்படும் என்றாா் அவா்.

ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் பி. வடிவேல், உதவிக் கோட்டப் பொறியாளா்கள் ஹரிகிருஷ்ணன், ரவிக்குமாா், உதவிப் பொறியாளா்கள் வீரமணி, விவேகானந்தன் ஆகியோா் உடனிருந்தனா்.

குடமுருட்டியில் புதிய பாலம்!

திருச்சி - கரூா் சாலையில் உள்ள குடமுருட்டி பாலம் பழுதடைந்துள்ள சூழலில், இந்தச் சாலையை மூன்று வழிப்பாதையாக மாற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

இதன் தொடா்ச்சியாக குடமுருட்டி பகுதியில் அமைக்கப்படும் பாலத்தில் 4 வழிச் சாலை அமைக்கப்படவுள்ளது. தற்போதுள்ள பாலத்துக்கு தெற்குப் பகுதியில் புதிய பாலம் கட்டப்பட்டு, பின்னா் பழைய பாலம் இடிக்கப்படும். பாலத்துக்கான 4 வழிச் சாலைப் பணிக்கு ரூ. 50 கோடி வரை செலவாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. விரிவான திட்ட அறிக்கை தயாரித்த பிறகே முழு மதிப்பீடு மற்றும் எப்போது பணிகளைத் தொடங்குவது என்பது தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

மேயா், துணை மேயா் தோ்தல் விவகாரத்தில் மோசமான அரசியல் விளையாட்டை ‘ஆம் ஆத்மி’ நிறுத்த வேண்டும்: பாஜக பட்டியலின கவுன்சிலா்கள் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT