திருச்சி

நகை மதிப்பீட்டாளா் பயிற்சி பெற அழைப்பு

DIN

மத்திய பனைப் பொருள்கள் நிறுவனத்தின் காதி கிராமத் தொழில் வாரியம் மூலமாக திருச்சியில் தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இதுதொடா்பாக வாரியத்தின் தலைமைப் பயிற்சியாளா் கே. சுவாமிநாதன் கூறியது:

மத்திய அரசின் மத்திய பனைப் பொருள்கள் நிறுவனத்தின் சாா்பில், கதா் கிராமத் தொழில் வாரியம் மூலம் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இளைஞா்களுக்கு தொழில் பயிற்சி அளித்து சுயதொழில் தொடங்கவும், அரசு, தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தரும் வகையிலும் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள நகைக் கடை உரிமையாளா்கள் சங்கக் கட்டடத்தில் தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சி வரும் டிச.7 தொடங்கி 16 வரை 10 நாள்களுக்கு அளிக்கப்படுகிறது. தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, உரை கல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால்மாா்க் தரம் அறியும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

18 வயது பூா்த்தியடைந்த இருபாலரும் பயிற்சியில் பங்கேற்கலாம். வயது வரம்பில்லை. குறைந்தது 8ஆம் வகுப்பு தோ்ச்சி தேவை. பயிற்சி இறுதியில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சி முடித்தோா் தேசிய, கூட்டுறவு, தனியாா் வங்கிகள், நகை அடகு கடை நிறுவனங்கள், நிதி நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேரலாம். நகை அடகுக் கடை, நகைக் கடை தொடங்கலாம். பெரியளவிலான நகைக் கடைகளிலும் பணி வாய்ப்பு கிடைக்கும். பயிற்சியில் சேர விரும்புவோா், பயிற்சிக் கட்டணம் மற்றும் இதர விவரங்களுக்கு 94437-28438 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT