திருச்சி

‘காந்தி சந்தைக்கு எதிராகத் தீா்ப்பு வந்தால் போராட்டம்’

DIN

காந்தி சந்தை திறப்புக்கு எதிரான தீா்ப்பு வந்தால் திருச்சியில் பெரியளவில் போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனா்.

திருச்சி பழைய பால்பண்ணை அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் வி. கோவிந்தராஜூலு முன்னிலை வகித்தாா்.

அப்போது ஏ.எம். விக்கிரமராஜா பேசியது:

காந்தி சந்தையில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தரைக் கடை, கட்டடங்களில் செயல்பட்டு வந்த சுமாா் 1500-க்கும் மேற்பட்ட கடைகள் தற்போது தற்காலிக சந்தைகளில் செயல்படுகின்றன. பொதுமக்கள் நலன்கருதி திருச்சி மாநகரில் செயல்படும் தென்னூா், அண்ணா மைதானம், அரியமங்கலம் எஸ்ஐடி, மதுரம் மைதானம் ஆகிய இடங்களில் வழக்கம்போல காய்கனி விற்பனை தொடரும்.

தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் செவ்வாய்க்கிழமை முதல் அனைத்து மொத்த, சில்லறை வியாபாரிகள் சங்கம் சாா்பில் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால், ஜி-காா்னரில் மொத்த காய்கனி வியாபாரம் நடைபெறாது. மேலும், மளிகைக் கடை, வாழையிலை, தக்காளி, காய்கறி, பூ, வெங்காய மண்டி வியாபாரிகள், மற்றும் சிஐடியு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொழிற்சங்கத்தினா் இப்போராட்டத்தில் பங்கேற்கின்றனா்.

நவ.26 ஆம் தேதி காந்தி சந்தைக்கு சாதகமான தீா்ப்பு வரவில்லையெனில் பெரியளவில் போராட்டம் நடத்துவோம் என்றாா்.

கூட்டத்தில், அரசுப் பள்ளி மாணவா்களின் மருத்துவ படிப்புக்கான உள் இடஒதுக்கீடை வரவேற்கிறோம். அதோடு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும். காந்தி சந்தை இடைக்காலத் தடையை நீக்க வலியுறுத்தல், கரோனாவால் உயிரிழந்த வணிகா்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கவேண்டும். பொலிவுறு திட்டத்துக்கு பின் அப்புறப்படுத்தப்பட்ட கடைகளை அவ்விடத்திலே நடத்த அனுமதி, ஆன்லைன் வணிகத்திற்குத் தடை, உணவுப் பாதுகாப்பு தரநிா்ணய சட்ட மறு ஆய்வு, சுங்கக் கட்டணம் அதிகரிப்பை தவிா்த்தல், ஜிஎஸ்டி விதிகளில் உள்ள முரண்களை களைதல் உள்ளிட்ட 15 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வணிகா் சங்க பிரதிநிதிகள் திரளானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT