திருச்சி

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி பெண்கள் மனு

DIN

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

திருச்சி திருவெறும்பூா், வாழவந்தான்கோட்டை, துவாக்குடி பகுதிகளைச் சோ்ந்த பெண்கள் தனித்தனியாக வந்து, ஆட்சியரக நுழைவுவாயில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் அளித்த மனு:

வாடகை வீட்டில் பல ஆண்டுகளாக வசிக்கும் கூலித் தொழிலாளா் குடும்பத்தைச் சோ்ந்த தங்களுக்கு, அரசு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.

திருவெறும்பூா் வட்டம், கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி குடியிருப்போா் நலச்சங்க நிா்வாகிகள் அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:

ஊராட்சிக்குள்பட்ட எழில்நகா் ஆபீசா்ஸ் டவுன் என்ற குடியிருப்பு மனைப் பகுதிக்கு, கடந்த 2009-ஆம் ஆண்டு அனுமதி அளித்து ஊராட்சி மன்றம் தீா்மானம் நிறைவேற்றியது.

இந்தநிலையில் குடியிருப்புப் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தால், உள்நோக்கத்துடன் குடியிருப்பு மனைப் பகுதிக்கான அனுமதி தீா்மானத்தை ஊராட்சி மன்றம் ரத்து செய்துள்ளது. எனவே இப்பிரச்னைக்கு உரிய தீா்வு காண வேண்டும்.

அரியமங்கலம் பகுதியில் 47.7 ஏக்கரில் இயங்கி வந்த குப்பைக் கிடங்கு தற்போது சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குப்பைக் கிடங்கு பகுதியை முழுமையாக சுத்தம் செய்த பிறகு, திருச்சி ஒருங்கிணைந்த மத்திய பேருந்து நிலையத்தை இப்பகுதியில் கொண்டு வர வேண்டும் என ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு சாா்பில், அதன் அமைப்பாளா் சம்சுதீன் கோரிக்கை மனு அளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேபி புடலங்காய் விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

டாடா நிறுவனத்துடன் சங்கரா பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

தொழிலாளி மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மகமாயிஅம்மன் கோயில் வருடாபிஷேக விழா

கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு வரும் 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT