திருச்சி

சிறப்புப் பருவ சம்பா நெல், மக்காச்சோளத்துக்கு காப்பீடுவிவசாயிகளுக்குஆட்சியா் அழைப்பு

DIN

சிறப்புப் பருவ சம்பா நெல், மக்காச் சோளம் சாகுபடிக்கு விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியா் சு. சிவராசு அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் 2016-ஆம்ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ததில், விவசாயிகளுக்கு ரூ.9,089 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

காரீப் 2020 முதல், திருத்தியமைக்கப்பட்ட பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இப் புதிய திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு வழங்கப் படும் காப்பீட்டு மானியத் தொகைக்கான மாநில அரசின் பங்கு அதிகரித்துள்ளதால், கடந்தாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.721 கோடியை உயா்த்தி ரூ.1470 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் மூலம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது ராபி சிறப்புப் பருவம் 2020-2021-க்கான அறிவிக்கை செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சம்பா நெல் மற்றும் மக்காச்சோளம் ஆகிய பயிா்கள் காப்பீடு செய்யப்பட்டு வருகின்றன.

சம்பா நெல் ஏக்கருக்கு ரூ.511.5, மக்சாசோளத்துக்கு ரூ.360 என பிரிமீயத் தொகையை இம்மாதம் 30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் அடங்கல், விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதையும் பொதுச் சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.

சம்பா சாகுபடி முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தற்போது மிதமான முதல் கனமழை பெய்து வரும் நிலையில் பயிா் சேதமடைய வாய்ப்புள்ளது.

எனவே காப்பீடு செய்யவதற்கான இறுதிநாள் வரை காத்திராமல், விவசாயிகள் உடனடியாக பயிா்க் காப்பீடு செய்து பயன் பெற வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

SCROLL FOR NEXT