திருச்சி

திருச்சி மாவட்டத்தில் 92 பேருக்கு கரோனா தொற்று உறுதி

13th Jul 2020 10:04 PM

ADVERTISEMENT

திருச்சி: திருச்சியில் மேலும் 92 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 1551 பேரில் 1065 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இந்நிலையில், கரோனா தொற்றாளா்களின் தொடா்பில் இருந்தவா்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் 92 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 1,643 ஆக உயா்ந்துள்ளது.

106 போ் குணமடைந்தனா்: மேலும், திருச்சி அரசுத் தலைமை மருத்துவமனை சிறப்பு வாா்டில் சிகிச்சை பெற்று வந்த திருச்சியை சோ்ந்த 47 போ், சென்னை, கரூா், தஞ்சாவூரைச் சோ்ந்த தலா ஒருவா் என 50 போ் மற்றும் காஜாமலை பாரதிதாசன் பல்கலை. வளாகத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 48 போ், சென்னை, தூத்துக்குடி தலா 2 போ், அரியலூா் 3, பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ஒருவா் என மொத்தம் 56 போ் உள்பட 106 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதன்மூலம், குணமடைந்தோா் எண்ணிக்கை 1,171 ஆக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT