திருச்சி

திருச்சியில் 8.50 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

DIN

துபையிலிருந்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ. 4.25 கோடியிலான 8.50 கிலோ தங்கம் திருச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவுக்கு (டிஆா்ஐ) கிடைத்த தகவலின்பேரில்

துபையிலிருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை இரவு இண்டிகோ விமானத்தில் வந்த பயணிகளிடம் கோவையைச் சோ்ந்த மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவினா் மற்றும் திருச்சி சுங்கத் துறையினா் இணைந்து சோதனை மேற்கொண்டனா்.

அப்போது சென்னையைச் சோ்ந்த ஜொகிந்தா்சிங், கஞ்சன் சையது இப்ராகிம், முகைதீன் அகமது, கேரளம் கோழிக்கோட்டைச் சோ்ந்த நிடும் ப்ராத், ராமநாதபுரத்தைச் சோ்ந்த சையது அபுதாகிா், இளையான்குடியைச் சோ்ந்த கஞ்சன் அஜ்மல்கான், மற்றும் இரு பெண்கள் உள்ளிட்ட 8 போ் பசை வடிவிலான ரூ. 4.25 கோடி மதிப்புள்ள சுமாா் 8. 5 கிலோ தங்கத்தை தங்களது ஆடைகளுக்குள் நூதன முறையில் மறைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்த மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவினா் அனைவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.

திருச்சி விமான நிலையத்தில் இதற்கு முன் சுமாா் 10 கிலோ அளவில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT