தஞ்சாவூர்

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

30th May 2023 04:29 AM

ADVERTISEMENT

பாபநாசம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக கட்டடத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் மேல ரஸ்தா பிரதான சாலை பகுதியில் வசித்து வந்தவா் மாரிமுத்து மகன் ஆனந்த் (38). கட்டடத் தொழிலாளி. இவருக்குத் திருமணமாகி மனைவி கோகிலா மற்றும் 3 மகள்கள் உள்ளனா். இந்நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக ஆனந்த் கடந்த 5 ஆண்டுகளாக மனைவி கோகிலாவைப் பிரிந்து வாழ்ந்து வந்தாா். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆனந்த் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஆனந்தின் மனைவி கோகிலா பாபநாசம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், பாபநாசம் காவல் ஆய்வாளா் (பொ)அனிதா கிரேசி உள்ளிட்ட போலீஸாா்

அங்கு சென்று சடலத்தை மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT