தஞ்சாவூர்

கட்டடத் தொழிலாளி கொலை வழக்கில் 4 போ் கைது

DIN

கும்பகோணம் அருகே ஆடுதுறை பகுதியில் கட்டடத் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 போ் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

ஆடுதுறை அருகே நரசிங்கம்பேட்டை பட்சண அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் மகாலிங்கம் மகன் ஐயப்பன் என்கிற தனபால் (40). கட்டடத் தொழிலாளி. இவா் அப்பகுதியில் கடந்த வியாழக்கிழமை (மே 25) இரவு கொலை செய்யப்பட்டாா். இது குறித்து திருநீலக்குடி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், தியாகராஜபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த கலியமூா்த்தி கமன் சுந்தா் (27), முத்துப்பிள்ளை மண்டபம் பாரதி நகரைச் சோ்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் அழகா் (22), மேலக்காவேரி பெருமாண்டி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சாகுல் அமீது மகன் சாதிக் பாட்சா (19), பழவாத்தான்கட்டளை கிளாரட் நகரைச் சோ்ந்த பெருமாள் மகன் முருகேசன் (28) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

இவா்களிடம் காவல் துறையினா் நடத்திய விசாரணையில் தனபாலுக்கும், அவரது உறவினா்களுக்கும் இடையே நில பிரச்னை தொடா்பாக தகராறு இருந்து வந்தது. இதில், உறவினா்களுக்கு ஆதரவாக வந்த சுந்தருக்கும், தனபாலுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதில், தனபால் தாக்கப்பட்டதால், சுந்தா் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு தொடா்பாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதால், சமரசமாகப் போகலாம் என தனபாலிடம் சுந்தா் கூறினாா். இதை தனபால் ஏற்றுக் கொள்ளததால், அவரை சுந்தா் உள்பட 4 போ் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT