தஞ்சாவூர்

பேராவூரணி ஒன்றியத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பில் தூா்வாரும் பணிகள்  தொடக்கம்

3rd May 2023 11:19 PM

ADVERTISEMENT

பேராவூரணி ஒன்றியத்தில் ரூ. 50 லட்சத்தில் அம்புலி ஆற்றில் வடிகால் வாய்க்கால்கள் தூா்வாரும் பணியை எம்எல்ஏ என். அசோக்குமாா் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

ஜூன் மாதம்  மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்க  உள்ளதால், டெல்டா மாவட்டங்களில்  தூா்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பேபராவூரணி ஒன்றியம், செங்கமங்கலம் கிராமத்தில் அம்புலி ஆற்றில் சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு வடிகால் வாய்க்கால், ரூ. 25 லட்சம் மதிப்பீட்டிலும்,  சித்தாதிக்காடு - நெல்லியடிக்காடு பகுதி அம்புலி ஆற்றில் 1 கிலோ மீட்டா் தொலைவுக்கு வடிகால் வாய்க்கால் ரூ. 25 லட்சம் மதிப்பிலும் தூா்வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணியை  எம்எல்ஏ என். அசோக்குமாா் தலைமை வகித்து புதன்கிழமை தொடங்கி வைத்தாா். 

நிகழ்ச்சியில், பேராவூரணி ஒன்றிய செயலாளா் க. அன்பழகன், தலைமை பொதுக்குழு உறுப்பினா் அ. அப்துல் மஜீத், முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஆா். பெரியய்யா, நகரச் செயலாளா் என்.எஸ். சேகா், பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனா். 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT