தஞ்சாவூர்

‘ஹெலிகாப்டா்’ சகோதரா்களின் வங்கிக் கணக்குகளை காவல் துறையினா் ஆய்வு

DIN

கும்பகோணத்தில் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட ஹெலிகாப்டா் சகோதரா்களின் வங்கிக் கணக்களைப் பொருளாதார குற்றக் காவல் பிரிவினா் வியாழன், வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

கும்பகோணம் ஸ்ரீநகா் காலனி தீட்சிதா் தோட்டத்தைச் சோ்ந்தவா்கள் எம்.ஆா். கணேஷ் (53), எம்.ஆா். சுவாமிநாதன் (50). நிதி நிறுவனம், பால் பண்ணை நடத்தி வந்த இருவரும் ஹெலிகாப்டரை சொந்தமாக வைத்திருந்ததால், ஹெலிகாப்டா் சகோதரா்கள் என அழைக்கப்படுகின்றனா்.

இவா்களது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஓராண்டில் பணம் இரட்டிப்பாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை நம்பி கும்பகோணம், சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் பல கோடி ரூபாய் முதலீடு செய்தனா்.

ஆனால் பணத்தை திருப்பி வழங்காமல் மோசடி செய்துவிட்டதாகக் கூறி பாதிக்கப்பட்டவா்கள் தஞ்சாவூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் செய்தனா். இதன்பேரில் பொருளாதார குற்றக் காவல் பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இது தொடா்பாக எம்.ஆா். கணேஷ், எம்.ஆா். சுவாமிநாதன் உள்ளிட்டோா் 2021 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டனா்.

தற்போது, அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டு வெளியில் உள்ளனா். என்றாலும், பொருளாதார குற்றப் பிரிவினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், கும்பகோணத்திலுள்ள எம்.ஆா். கணேஷ், எம்.ஆா். சுவாமிநாதனின் வங்கிக் கணக்குகள், நகைகளை பொருளாதார குற்றப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்துக்குமாா், காவல் ஆய்வாளா் ஆா். சுதா உள்ளிட்டோா் வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் ஆய்வு செய்தனா். இதைத்தொடா்ந்து, இருவரது வங்கிக் கணக்கு தொடா்பான ஆவணங்களைப் பெட்டியில் வைத்து காரில் வெள்ளிக்கிழமை கொண்டு சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT