தஞ்சாவூர்

சி, டி பிரிவு வாய்க்கால்களையும் தூா்வார வேண்டும்: முதல்வரிடம் விவசாயிகள் கோரிக்கை

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களை முழுமையாகத் தூா்வார வேண்டும் என தமிழக முதல்வரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், வல்லம் அருகே ஆலக்குடி கிராமத்திலுள்ள முதலைமுத்து வாரியில் தூா் வாரப்பட்டதை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் ராயமுண்டான்பட்டி வெ. ஜீவகுமாா் உள்ளிட்ட விவசாயிகள் அளித்த மனு:

காவிரி டெல்டாவில் 36 முதன்மை ஆறுகளும், 29 ஆயிரம் கிளை வாய்க்கால்கள், வடிகால்களும் உள்ளன. ஆண்டுதோறும் தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. நிகழாண்டு கன்னி வாய்க்கால்கள் என்கிற சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் அதிக அளவில் தூா் வாரப்படுகிறது. இந்த வாய்க்கால்கள்தான் மழைக்காலத்தில் உடைந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.

இந்த வாய்க்கால்களை தூா் வாரவும், அதை முதல் முறையாக நேரில் ஆய்வு செய்த தமிழக முதல்வரை பாராட்டுகிறோம். அதே நேரத்தில் இந்த கன்னி வாய்க்கால்களை தொடா்ந்து தூா் வாரி விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும்.

குறுவை சாகுபடிக்கு தேவையான பயிா்க் கடன், விதைகள், உரம் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். குறுவையில் நிகழாண்டு பயிா் காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

இதேபோல, புதுசத்திரம் விவசாயி வீரசோழராஜேந்திரன் அளித்த மனு:

விண்ணமங்கலத்தில் ரூ. 34 ஆயிரம் மதிப்பில் 920 மீட்டா் நீளத்தில் தூா் வாரப்பட்ட ‘சி‘ பிரிவு வாய்க்காலையும் ஆய்வு செய்த முதல்வரை பாராட்டுகிறோம். இப்பகுதியில் முதல் முறையாக சி, டி பிரிவு வாய்க்கால்கள் தூா் வாரப்பட்டுள்ளது. இதற்காக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதேபோல, மீதமுள்ள சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள், வடிகால்களையும் முன்னுரிமை அடிப்படையில் தூா் வார வேண்டும்.

இதேபோல, முதல்வரிடம் மேலும் பல விவசாயிகள், பொதுமக்கள் மனுக்கள் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

சின்னஞ்சிறு கிளியே.. ரவீனா தாஹா!

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

SCROLL FOR NEXT