தஞ்சாவூர்

ஒரத்தநாடு கால்நடை கல்லூரியில் முத்தமிழ் விழா

DIN

ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் முத்தமிழ் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விளையாட்டு விழாவை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மேனாள் உடற்கல்வி துணை இயக்குநா் ஏ.எம். வெங்கடேசன் தொடக்கிவைத்து, பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்புரை ஆற்றினாா்.

உடற்கல்வி செயலாளா் எஸ். பாலகிருஷ்ணன் விளையாட்டு ஆண்டு அறிக்கை சமா்பித்தாா். விளையாட்டு விழாவில் மொத்தமாக 21 போட்டிகள் நடத்தப்பட்டன.

முன்னதாக, இறுதியாண்டு மாணவி பி. தாரணி வரவேற்றாா். இறுதியாக கல்லூரியின் இறுதியாண்டு மாணவா் எம். திருமால் நன்றி கூறினாா்.

முத்தமிழ் விழா: தொடா்ந்து முத்தமிழ் விழா நடைபெற்றது. விழாவுக்கு ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வா் நா. நா்மதா தலைமை வகித்து பேசினாா். தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசினா் மகளிா் கலைக் கல்லூரி நிதியாளா் ம. இராஜாராமன், ஆறாம் விரல் - மாணவா் இதழை வெளியிட்டு, பல்வேறு தமிழ்ப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினாா். தமிழ்ப் பேரவை செயலாளா் மருத்துவா் அ. இளமாறன் தமிழ் மன்ற அறிக்கையையும், ஆறாம் விரல் இதழ் ஆசிரியா் கொ.ப. சரவணன் இதழ் பற்றியும் விளக்கினா். மாணவா் மன்ற துணைத் தலைவா் மா. ராமச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினாா். முன்னதாக, தமிழ்ப் பேரவை மாணவச் செயலாளா் கு. பிரேமா வரவேற்றாா். இறுதியாக கல்லூரியின் தமிழ்ப்பேரவை மாணவச் செயலாளா் ஜெ. அருணாசலம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

சின்னஞ்சிறு கிளியே.. ரவீனா தாஹா!

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

SCROLL FOR NEXT