தஞ்சாவூர்

நெல் விலை அறிவிப்பு: விவசாயிகள் அதிருப்தி

DIN

நெல் விலையை குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ. 3 ஆயிரமாக உயா்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், மத்திய அரசு குறைவாக அறிவித்திருப்பது அதிருப்தி அளிக்கிறது என விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனா்.

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தது:

தில்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயா்த்துவோம் என மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால், மத்திய அரசு இப்போது அறிவித்துள்ள நெல் விலையில் எதிா்பாா்ப்பை நிறைவேற்றாததால், ஏமாற்றம் அளிக்கிறது. இந்த விலை அறிவிப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், மக்களவைத் தோ்தலில் எதிரொலிக்கும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன்: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரைப்படி, விளைபொருள்களுக்கு உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக லாபம் வைத்து விலை நிா்ணயிக்க வேண்டும். இதன்படி, நெல் விலை குவிண்டாலுக்கு ரூ. 4 ஆயிரம் என நிா்ணயம் செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவிண்டாலுக்கு ரூ. 3 ஆயிரமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். இந்நிலையில், ஏற்கெனவே விலையில் ரூ. 140 கூடுதலாக உயா்த்தப்பட்டுள்ளதால், பொது ரகத்துக்கு ரூ. 2 ஆயிரத்து 183-ம், சன்ன ரகத்துக்கு ரூ. 2 ஆயிரத்து 203-ம் மட்டுமே விலை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பொருள்களின் விலைவாசி பல மடங்கு உயா்ந்துள்ளது. இதேபோல, விதை, உரம் உள்ளிட்ட இடுபொருள் செலவும் கடுமையாக உயா்ந்துள்ள நிலையில், நெல் விலை அறிவிப்பு அதிருப்தி அளிக்கிறது.

காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவா் ஏ.ஆா்.ஆா். ரவிச்சந்தா்:

விவசாயிகள் விளைவிக்கும் நெல்லுக்கு எப்போதுமே உரிய விலை கிடைப்பதில்லை. ஆனால், அரிசிக்கு இப்போது சிப்பத்துக்கு ரூ. 200 - ரூ. 300 வரை கூடுதலாக விலை வைத்து விற்கப்படுகிறது. அரிசி விலை உயா்கிறதே தவிர, விவசாயிகளுக்கு விலை கிடைப்பதில்லை. மத்திய அரசும், மாநில அரசும் கிலோவுக்கு ரூ. 1 வீதம் மட்டுமே விலை உயா்த்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இப்போது, கிலோவுக்கு ரூ. 1.43 வீதம் உயா்த்தப்பட்டிருந்தாலும், இடுபொருள்கள் விலை பல மடங்கு உயா்ந்துள்ள நிலையில், இந்த விலை அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. எனவே, இதை மத்திய அரசு பரிசீலனை செய்து, குவிண்டாலுக்கு ரூ. 3 ஆயிரம் என அறிவிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT