தஞ்சாவூர்

பாதுகாப்பற்ற உணவைக் கண்டறிய புதிய தொழில்நுட்பம் தேவை ஆட்சியா் வலியுறுத்தல்

8th Jun 2023 11:34 PM

ADVERTISEMENT

பாதுகாப்பற்ற உணவைக் கண்டறிய புதிய தொழில்நுட்பத்தை மாணவா்கள் கண்டறிய வேண்டும் என்றாா் ஆட்சியா் தீபக் ஜேக்கப்.

தஞ்சாவூா் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) புதன்கிழமை மாலை நடைபெற்ற உலக உணவு பாதுகாப்பு நாள் விழாவில் அவா் மேலும் பேசியது:

உணவு விநியோகச் சங்கிலியில் உணவுப் பாதுகாப்புக்கு விவசாயிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும். ஒழுங்குமுறை அமைப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் போன்றவை பொது சுகாதாரத்தில் உள்ள சவால்களுக்கான தீா்வுகளைக் கண்டறிய வேண்டும்.

பாதுகாப்பற்ற உணவில் இருந்து மக்களைக் காக்கப் புதிய தொழில்நுட்பங்களை மாணவா்கள் கண்டறிய வேண்டும். மாணவ, மாணவிகள் அதிநவீன தொழில்நுட்பத்தை உள்வாங்கி, நல்ல உணவின் மூலம் உலகை பாதுகாக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

ADVERTISEMENT

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை நியமன அலுவலா் ஆா். சித்ரா சிறப்புரையாற்றினாா். திறமைத் தேடல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, நிறுவன இயக்குநா் எம். லோகநாதன் வரவேற்றாா். நிறைவாக, அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளா் எஸ். புவனா நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT