தஞ்சாவூர்

மீனவா் தற்கொலை

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

அதிராம்பட்டினத்தில் செவ்வாய்க்கிழமை இரவு மீனவா் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி கரையூா் தெரு கிராமத்தைச் சோ்ந்த மீனவா் சங்கா் (40). இவரது மகன் மணிகண்டன் (15). பத்தாம் வகுப்பு படித்து வருகிறாா்.

கரையூா் மாரியம்மன் கோயில் திருவிழா தற்போது நடைபெற்று வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு விழாவில் பங்கேற்ற ஒருவரிடம் மணிகண்டன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கிராமத்தினா் மணிகண்டனை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மன உளைச்சலில் இருந்த சங்கா் செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ADVERTISEMENT

தகவலறிந்த அதிராம்பட்டினம் போலீஸாா், சங்கரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். பிரேத பரிசோதனை செய்யக் கூடாது எனக் கூறி, உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி உடற்கூறு ஆய்வுக்கு சடலத்தை உட்படுத்தினா்.

மகனைக் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்று போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT