தஞ்சாவூர்

காா் மோதி வாய்க்காலுக்குள் விழுந்தவா் பலி

6th Jun 2023 02:52 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திங்கள்கிழமை காா் மோதி வாய்க்காலுக்குள் விழுந்த விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கும்பகோணம் வட்டம், விசலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரைய்யன் மகன் கோபு (42). விவசாயி. இவா், திங்கள்கிழமை களஞ்சேரி கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டுக்குவந்தாா். இந்நிலையில், கோபு இருசக்கர வாகனத்தில் அருகில் இருந்த மோட்டாா் ஷெட்டில் குளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது பின்னால் வந்த காா் மோதியதில் கோபு அருகில் இருந்த வாய்க்காலுக்குள் விழுந்தாா். மேலும், காரின் முன்பக்க சக்கரங்கள் வாய்க்காலுக்குள் இறங்கின. இதில் காா் சக்கரங்களின் அடியில் சிக்கிக் கொண்ட கோபு நீரில் மூழ்கி உயிரிழந்தாா். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அம்மாபேட்டை போலீஸாா் காரை அப்புறப்படுத்தி சடலத்தை மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். புகாரின்பேரில் அம்மாபேட்டை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT