தஞ்சாவூர்

அரசுப் பள்ளிகளில் கே.ஜி. வகுப்புகளில்40 ஆயிரம் மாணவா்கள் சோ்க்கைஅமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

DIN

அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் 40 ஆயிரம் மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா் என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை மேலும் தெரிவித்தது:

அரசுப் பள்ளிகளில் நிகழாண்டு மே மாதத்தில் மட்டும் 80 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவா்கள் சோ்ந்துள்ளனா். பள்ளிகள் திறப்புக்கு பிறகு எத்தனை மாணவா்கள் சோ்ந்துள்ளனா் என்ற முழு விவரமும் தெரிய வரும்.

தமிழக முதல்வரின் வானவில் மன்றம், புதுமைப்பெண் உள்ளிட்ட சிறந்த திட்டங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 11 லட்சம் மாணவா்கள் சோ்ந்துள்ளனா். தமிழகத்திலுள்ள 2 ஆயிரத்து 381 பள்ளிகளிலுள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் இதுவரை 40 ஆயிரம் மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா்.

நிகழாண்டைவிட கூடுதலாக தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னதாகவே பள்ளி, வகுப்பறைகளைச் சுத்தப்படுத்துதல், வளாகத்தில் புதா்களை அகற்றுதல், தண்ணீா், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதை அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலா்கள் கண்காணித்து வருகின்றனா்.

அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியா்கள் இல்லை எனக் கூற முடியாது. அனைத்து பள்ளிகளிலும் கூடுதல் பொறுப்புடன் ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா்.

வட மாவட்டங்களில் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க தொடா்புடைய முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியா்களின் கோரிக்கைகள் நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றாா் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT