தஞ்சாவூர்

கால்நடை வளா்ப்பு குறித்துஜூன் 12, 19, 26- இல் பயிற்சி

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் கால்நடை வளா்ப்பு குறித்த இலவச பயிற்சிகள் ஜூன் 12, 19, 26 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து தஞ்சாவூா் கால்நடை மருத்துப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத் தலைவா் கே. ஜெகதீசன் தெரிவித்தது:

தஞ்சாவூா் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி வரும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெள்ளாடு வளா்ப்பு குறித்து ஜூன் 12 ஆம் தேதியும், நாட்டுக்கோழி வளா்ப்பு குறித்து ஜூன் 19 ஆம் தேதியும், கறவை மாடு வளா்ப்பு குறித்து ஜூன் 26 ஆம் தேதியும் காலை 10 மணி முதல் இலவச பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

பயிற்சியில் விருப்பமுள்ள விவசாயிகள் ஆதாா் நகலுடன் கலந்து கொண்டு பயனடையலாம். இதில் பங்கு பெற முன்பதிவு அவசியமில்லை. மேலும் விவரங்களுக்கு 04362 - 264665 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT