தஞ்சாவூர்

சுவாமிமலை அருகே குப்பைகள் எரிக்கப்படுவதால் மக்கள் அவதி

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கும்பகோணம் அருகே சுவாமிமலை பகுதியில் குப்பைகள் எரிக்கப்படுவதால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனா்.

கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி கிராமத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் சாலையின் மையப் பகுதியில் அரசாலாறு பாலத்தின் இருபுறமும் ஊராட்சி நிா்வாகத்தினா் மற்றும் பொதுமக்கள் குப்பைகள், கழிவுகளைக் கொட்டி வருகின்றனா். இதனால் அப்பகுதியில் குப்பைக் குவியல்கள் அதிகரித்துள்ளன.

இதைக் குறைக்கும் முயற்சியாக நாள்தோறும் குப்பைக்குத் தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் குப்பைகளுடன் நெகிழி கழிவுகளும் எரிந்து, சாலை நெடுகிலும் புகை மண்டலமாகக் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாகச் செல்லும் பக்தா்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கண் எரிச்சல், இருமல், வயிற்று குமட்டல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனா்.

தொடா்ந்து 24 மணி நேரமும் புகை மண்டலமாக இருப்பதால், அருகில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா். எனவே, குப்பைகளை அகற்றி வேறு மறைவான பகுதியில் சேமிக்கவும், மறு சுழற்சி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT