தஞ்சாவூர்

காா் ஓட்டுநா் தற்கொலை

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் அருகே காா் ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழப் பழஞ்சூா் கிராமத்தைச் சோ்ந்தவா் லட்சுமணன் (42). இவா், அதே ஊரைச் சோ்ந்த தொழிலதிபரும், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினருமான பழஞ்சூா் செல்வத்திடம் 15 ஆண்டுகளாக ஓட்டுநராக வேலை செய்து வந்தாா்.

கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பழஞ்சூா் செல்வத்திடமிருந்து விலகி, வேறு இடத்தில் லட்சுமணன் வேலை செய்து வந்தாராம்.

இந்நிலையில், லட்சுமணன் செவ்வாய்க்கிழமை மாலை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாராம்.

ADVERTISEMENT

இதையடுத்து, லட்சுமணனின் மனைவி அமுதா அளித்த புகாரின்பேரில், அதிராம்பட்டினம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT