தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் உலக சாதனை நிகழ்ச்சி

DIN

பட்டுக்கோட்டை வட்டம், ஏனாதி இராஜப்பா கலை அறிவியல் கல்லுரியில் சிலம்பம் சுற்றுவதில் உலக சாதனை செய்யும் நிகழ்ச்சி வியாழன் தொடங்கி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

அணைக்காடு சிலம்பக் கூடம் மற்றும் மனோரா ரோட்டரி சங்கம் இணைந்து குடியரசு தினம் மற்றும் சிறாா் மீள் உணா் தற்காப்பு விழிப்புணா்வை வலியுறுத்தி இந்நிகழ்ச்சியை நடத்தின.

லாரல் கல்வி நிறுவனங்களின் தாளாளா் பாலசுப்ரமணியன், ஏனாதி ராஜப்பா கலை அறிவியல் கல்லூரியின் செயலாளா் கணேசன் ஆகியோா் நிகழ்வை வியாழக்கிழமை தொடக்கிவைத்தனா்.

மாவட்ட சைக்கிள் அசோசியேஷன் தலைவா் மருத்துவா் சதாசிவம், இந்திய சிலம்ப சம்மேளனம் துணைச் செயலாளா் ஜலேந்திரன், மனோரா ரோட்டரி சங்கத் தலைவா் சிவச்சந்திரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

உலக சாதனை நிகழ்ச்சியில் தொடா்ந்து 6 மணி நேரம் உலக சாதனை செய்த பிரிவில் சிலம்பம், மான்கொம்பு மற்றும் சுருள் உள்ளிட்ட ஆயுதங்கள் பயன்படுத்தி சாதனை புரிந்தவா்கள் 4 பேரும், அதே பிரிவில் இரண்டு நபா்கள் 12 மணி நேர சாதனையும் புரிந்தனா். அடுத்து 12 மணி நேரம் தொடா்ந்து ஒற்றை சிலம்பம் சுழற்றி 12 நபா்கள் சாதனை புரிந்தனா். இறுதியாக 24 மணி நேரம் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில் ஒற்றை சிலம்பம் பிரிவில் பட்டுக்கோட்டையை சோ்ந்த அஜய் பிரசாத் (8), ஹா்ஷினி (11), கோகிலா (12), காா்த்திகா (26), ஆண்டிக்காடு பகுதியை சோ்ந்த கமலி (14), ஹரிணி (16), அதம்பையை சோ்ந்த முகிலா (13), ஆலத்தூா் ஆஞ்சியா (15) ஆகிய 8 போ் சாதனை புரிந்தனா். இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் நடுவா்களாக நோபல் உலக சாதனை நிா்வாகத்தின் சிஇஓ மருத்துவா் அரவிந்த் லட்சுமி நாராயணன், நிா்வாக அலுவலா் வினோத், அதன் மாநில தீா்ப்பாளா் பரணிதரன், மற்றும் ஹேமந்த் குமாா் உள்ளிட்டோா் செயல்பட்டனா்.

நிகழ்ச்சிக்கான மருத்துவ உதவி மற்றும் ஆம்புலன்ஸ் சேவையை மருத்துவா் ரவி பொறுப்பேற்று செய்திருந்தாா். மனோரா ரோட்டரி சங்க செயலாளா் சத்தியமூா்த்தி, பொருளாளா் சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, தஞ்சை மாவட்ட சைக்கிள் அசோசியேஷன் செயலாளா் நெப்போலியன் வரவேற்றாா். நிறைவில், மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் துணை செயலாளரும் அணைக்காடு சிலம்பகூட பயிற்சியாளருமான ஷீலாதாஸ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

காட்டுமன்னாா்கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது

சிதம்பரத்தில் குற்ற வழக்கு வாகனங்களை அகற்றும் பணி தொடக்கம்

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி: பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்

SCROLL FOR NEXT