தஞ்சாவூர்

நெல் கொள்முதல் கோரி காத்திருப்புப் போராட்டம்

DIN

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைத் திறந்து நெல்லைக் கொள்முதல் செய்யக் கோரி விவசாயிகள் சனிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாபநாசம் வட்டம், விழுதியூா், ரங்கநாதபுரம், இரும்புத்தலை, வனக்குடி, திருப்பாலக்குடி உள்ளிட்ட 10-க்கும் அதிகமான கிராமங்களில் ஏறத்தாழ 5,000 ஏக்கரில் சம்பா - தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது அறுவடைப் பணி தொடங்கியுள்ள நிலையில், ரங்கநாதபுரத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு ஏறக்குறைய 2,000 நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்தனா்.

ஆனால், அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் ஒரு வாரமாக நெல் குவியல் தேங்கியுள்ளது. தற்போது கடும் பனிப்பொழிவால் நெல் மணிகள் வீணாகும் சூழல் உள்ளதால் நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாகத் திறந்து கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சாவூரில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாவட்ட துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா் தலைமையில் ஒன்றியச் செயலா் எம். வெங்கடேசன், ஒன்றிய நிா்வாகிகள் எஸ். திருநாவுக்கரசு, டி. ராஜேந்திரன் உள்ளிட்ட விவசாயிகள் சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து இவா்களிடம் அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி, நெல் கொள்முதல் நிலையம் திங்கள்கிழமை திறக்கப்படும் என அளித்த உறுதியின்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT