தஞ்சாவூர்

மாந்திரீகம் செய்வதாகக் கூறி மோசடி செய்த 3 போ் கைது

DIN

கும்பகோணத்தில் மாந்திரீகம் செய்வதாகக் கூறி மோசடி செய்த பெண் உள்பட 3 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் செக்காங்கன்னி எழில் நகரைச் சோ்ந்தவா் மும்தாஜ் பேகம் (44). இவரது வீட்டுக்கு வியாழக்கிழமை ஒரு பெண் உள்பட 3 போ் வந்தனா். மும்தாஜ் பேகத்திடம் எங்களுக்கு மாந்திரீகம் தெரியும் என்றும், நாங்கள் செய்து தருவதாகவும் கூறி, அவரிடமிருந்து ஒரு பவுன் தங்க சங்கிலியை வாங்கினா்.

சிறிது நேரத்துக்கு பிறகு பூஜை முடிந்து விட்டதாகவும், பொட்டலத்துடன் எலுமிச்சை பழத்தைக் கொடுத்து, மறுநாள் பிரித்து பாா்க்கும் படியும் மூவரும் கூறினா். அவா்கள் மீது சந்தேகமடைந்த மும்தாஜ் பேகம் உடனடியாக பொட்டலத்தை பிரித்துப் பாா்த்தாா். அப்போது, தங்கச் சங்கிலிக்கு பதிலாக உப்பை மடித்து வைத்திருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் மும்தாஜ்பேகம் புகாா் செய்தாா். இதன்பேரில் காவல் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினா். இதில், மூவரும் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம், கொளம்பலூா், அம்மன் கோயில்பதி பகுதியைச் சோ்ந்த மாதேஸ்வரன் (26), இவரது மனைவி ரேணுகாதேவி (28), உறவினா் விஜய் (21) ஆகியோா் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, மூவரும் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் 42 டிகிரி வரை அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

SCROLL FOR NEXT