தஞ்சாவூர்

காலத்துக்கேற்ப தமிழ்மொழிக் கற்பித்தலில் மாற்றம் தேவை: முன்னாள் துணைவேந்தா் சி. சுப்பிரமணியம்

DIN

காலத்துக்கேற்ப தமிழ்மொழிக் கற்பித்தலில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றாா் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சி. சுப்பிரமணியம்.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கத் தொடக்க விழாவில் அவா் மேலும் பேசியது:

முன்பெல்லாம் நூல்களிலிருந்து குறிப்புகள் தயாா் செய்து பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால், தற்போது கைப்பேசி, அறிதிறன்பேசி உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் வளா்ச்சி அடைந்துள்ள நிலையில், அதுபோன்று பாடங்களை நடத்த முடியாது. ஆசிரியா்கள் நடத்துகிற பாடத்தை மாணவா்கள் உடனடியாக இணையவழி மூலம் சரிபாா்க்கும் நிலை வந்துவிட்டது.

எனவே, நடைமுறையில் உள்ள தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப கற்பித்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் நவீன காலத்துக்கு ஏற்றவாறு உயா்கல்வி வளா்ச்சி பெறும். அது, தமிழ்மொழிக்கும் பொருந்தும் என்றாா் சுப்பிரமணியம்.

இவ்விழாவுக்கு துணைவேந்தா் வி. திருவள்ளுவன் தலைமை வகித்தாா். இலங்கை திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் மொழிக் கற்கைகள் துறைத் தலைவா் கலா சந்திரமோகன் கருத்துரையாற்றினாா். கிழக்கு ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா சமாரா பல்கலைக்கழகப் பேராசிரியா் சின்னையா அன்பழகன் வாழ்த்துரையாற்றினாா். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளா் கு. சின்னப்பன் நோக்கவுரையாற்றினாா். பதிவாளா் (பொறுப்பு) சி. தியாகராஜன் உள்ளிட்டோா் பேசினா்.

முன்னதாக, தொல்லறிவியல் துறை உதவிப் பேராசிரியா் இரா. சீனிவாசன் வரவேற்றாா். நிறைவாக, சமூக அறிவியல் துறை உதவிப் பேராசிரியா் மா. அறிவானந்தன் நன்றி கூறினாா்.

பின்னா், மாலையில் கலை விழாவில் திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி மாணவா்களின் கலைகள் வழி கற்பித்தல் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், பேராசிரியா் கு. சின்னப்பன் எழுதிய திருநங்கைகள் வாழ்வியல், தமிழ் இலக்கண, இலக்கியங்களில் திருநங்கையா், தமிழ்த் திரைப்படங்களில் திருநங்கையா், தமிழ்த் திரைப்படங்களில் திருநங்கையா் சித்தரிப்பு ஆகிய 4 நூல்கள் வெளியிடப்பட்டன.

சனிக்கிழமை மாலை இக்கருத்தரங்கத்தின் நிறைவு விழா நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT