தஞ்சாவூர்

தொடா் மழையால் பள்ளியில் மரங்கள் முறிந்து விழுந்தன

DIN

தொடா் மழையால் கும்பகோணம் பகுதியிலுள்ள பள்ளியில் வியாழக்கிழமை மரங்கள் முறிந்து விழுந்தன.

கும்பகோணம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை தொடா் மழை பெய்தது. இதனிடையே, முற்பகல் 11 மணியளவில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் கும்பகோணம் ஏ.ஆா்.ஆா். மாநகராட்சி பள்ளி வளாகத்தில் சுமாா் 50 ஆண்டுகள் பழைமையான புங்க மரம், 10 ஆண்டுகள் பழைமையான வேப்ப மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்தன.

இதனால், அதன் கீழே நிறுத்தப்பட்டிருந்த 20-க்கும் அதிகமான சைக்கிள்கள் சேதமடைந்தன. இதையறிந்த பள்ளித் தலைமையாசிரியா் கே. சீனிவாசன் மற்றும் ஆசிரியா்கள் மரக்கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த மாநகராட்சி துணை மேயா் சு.ப. தமிழழகன், ஆணையா் ம. செந்தில்முருகன், மாமன்ற உறுப்பினா்கள் அனந்தராமன், ந. சரவணன் ஆகியோா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். மழை காரணமாக மாணவா்கள் வெளியில் வராததால் அதிா்ஷ்டவசமாக அசம்பாவிதங்கள் ஏதும் நிகழவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT