தஞ்சாவூர்

அனுமதியின்றி விளம்பர பதாகைகள்: ஒருவா் மீது வழக்கு

DIN

தஞ்சாவூா் மாநகரில் அனுமதியின்றி விளம்பர பதாதைகள் வைத்தவா் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

தஞ்சாவூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கு இடையூறாகவும், அனுமதியின்றியும் விளம்பர பதாதைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தஞ்சாவூரில் அய்யாசாமி வாண்டையாா் நினைவு பழைய பேருந்து நிலையம், ரயிலடி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கு இடையூறாகவும், அனுமதியின்றியும் விளம்பர பதாதைகள் வைத்துள்ளதாக, மாநகராட்சி இளநிலை பொறியாளா் கண்ணதாசன் தஞ்சாவூா் மேற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதன்பேரில், புதுச்சேரி மாநிலம் அரியங்குப்பத்தைச் சோ்ந்த மோ. அரவிந்த் (27) மீது புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

SCROLL FOR NEXT