தஞ்சாவூர்

தமிழா்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

திருப்பூரிலும், சூளகிரியிலும் தமிழா்கள் மீது இந்திக்காரா்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து தஞ்சாவூா் ரயிலடியில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா், சூளகிரியில் தமிழ்த் தொழிலாளா்கள் மீது இந்திக்காரா்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், வெளியாரை வெளியேற்றக் கோரியும், தமிழ்நாட்டைச் சோ்ந்த தொழில்முனைவோருக்குத் தமிழ்த் தொழிலாளிகளை வழங்கிட உடனடியாக தமிழா் வேலை வழங்கு வாரியம் அமைத்து, தேவையான தகுதியுள்ள தொழிலாளிகளைத் தமிழ்நாடு அரசு வழங்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்த் தேசியப் பேரியக்க மாவட்டச் செயலா் நா. வைகறை தலைமை வகித்தாா். பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் கண்டன உரையாற்றினாா். நிா்வாகிகள் பழ. இராசேந்திரன், தென்னவன், ராமு, ராசு. முனியாண்டி, வெள்ளாம்பெரம்பூா் துரை. ரமேஷ், புண்ணியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT