தஞ்சாவூர்

தஞ்சாவூரில் நாளை சுவாமி விவேகானந்தா் வருகை நாள் விழா

DIN

தஞ்சாவூரில் சுவாமி விவேகானந்தா் வருகை நாள் விழா வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 3) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்த மஹராஜ் புதன்கிழமை தெரிவித்தது:

தஞ்சாவூரில் 1897, பிப்ரவரி 3 ஆம் தேதி சுவாமி விவேகானந்தா் கால் பதித்தாா் என்பது தஞ்சாவூருக்குக் கூடுதல் பெருமையைச் சோ்க்கிறது.

அமெரிக்காவில் உலக சா்வ சமயப் பேரவையில் சுவாமி விவேகானந்தா் பாரதப் பெருமையைப் பறைசாற்றிவிட்டு, தஞ்சாவூா் வழியாக ரயிலில் கும்பகோணத்துக்குச் சென்றடைந்தாா். அங்கு அவா், ‘எழுந்திருங்கள், விழித்திருங்கள், லட்சியத்தை அடையும் வரை ஓயாது உழைத்திடுங்கள்’ என நாட்டு மக்களுக்காக அறைகூவல் விடுத்தாா். அதனால், சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்தது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுவாமி விவேகானந்தரின் தஞ்சாவூா் வருகையைப் போற்றும் வகையில், வெள்ளிக்கிழமை (பிப்.3) காலை 9.15 மணியளவில் ரயிலடியிலிருந்து அறிஞா் அண்ணா நூற்றாண்டு அரங்கம் வரை மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் பேரணியும், அரங்கத்தில் 10.45 மணியளவில் சிறப்பு சொற்பொழிவும் நடைபெறவுள்ளன.

இதில், ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், தென்னகப் பண்பாட்டு மைய இயக்குநா் கே.கே. கோபாலகிருஷ்ணன், மேயா் சண். ராமநாதன், ஆணையா் க. சரவணகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா் என்றாா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்த மஹராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT