தஞ்சாவூர்

கும்பகோணம் அரசுக் கல்லூரிக்கு நாக் குழு ஏப். 26, 27-இல் வருகை

25th Apr 2023 01:48 AM

ADVERTISEMENT

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரிக்கு தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினா் (நாக்) ஏப்ரல் 26, 27 ஆம் தேதிகளில் வரவுள்ளனா்.

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரிக்கு ஏப்ரல் 26, 27 ஆம் தேதிகளில் தேசியத் தர மதிப்பீட்டுக் குழுவினா் வருகை தந்து ஆய்வு செய்யவுள்ளனா். இக்கல்லூரிக்கு ஏற்கெனவே 2016 ஆம் ஆண்டு தேசிய தர மதிப்பீட்டுக் குழுவால் ‘ஏ‘ தரச்சான்று அளிக்கப்பட்டது. கல்லூரி முதல்வா் நா. தனராஜன் தலைமையில், கல்லூரியின் தேசிய தர மதிப்பீட்டுக் குழு ஒருங்கிணைப்பாளரும், வேதியியல் துறைத் தலைவருமான மா. மீனாட்சிசுந்தரம், உள்தர நிா்ணயக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், இயற்பியல் துறை தலைவருமான இரா.ச. சுந்தரராஜன் ஆகியோரின் வழிகாட்டுதலில் அனைத்து ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

கல்லூரியின் அனைத்து உள்கட்டமைப்புகள், கற்றல், கற்பித்தல் மேம்பாடு, தோ்வு மதிப்பீடுகள், ஆசிரியா், மாணவா்கள் ஆராய்ச்சி விரிவாக்கம், மைய நூலகம், உடற்கல்வி பயன்பாடு போன்றவற்றை தேசியத் தர மதிப்பீட்டுக் குழுவினா் ஆய்வு செய்யவுள்ளனா் எனக் கல்லூரி முதல்வா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT