தஞ்சாவூர்

குப்பைகள் கொட்டப்படுவதை எதிா்த்துபொது மக்கள் சாலை மறியல்; 12 போ் கைது

DIN

கும்பகோணம் அருகே குப்பைகள் கொட்டப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணம் அருகே உள்ளூா் ஊராட்சி நிா்வாகத்துக்கு உள்பட்ட புறவழிச்சாலையில் காவிரி கரையோரம் 10 ஆண்டுகளுக்கு முன்பு தற்காலிகமாக எனக் கூறி மயானம் அமைக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு ஊராட்சி நிா்வாகம் குப்பைகளைக் கொட்டி தீயிட்டுக் கொளுத்தி வந்தனா். இது குறித்து மாவட்ட நிா்வாகத்திடம் அப்பகுதி மக்கள் 10 ஆண்டுகளாக புகாா் செய்து வந்தனா். ஆனால், எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருந்த நிலையில், அண்மையில் அந்த ஊராட்சியை சோ்ந்தவா்கள் மயானத்துக்கு அருகில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் குப்பைகளைக் கொட்டத் தொடங்கினா்.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சனிக்கிழமை புறவழிச் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மயானத்தை இடமாற்றம் செய்ய வேண்டும். குறிப்பிட்ட இடத்தில் குப்பைகளைக் கொட்டி தீயிட்டுக் கொளுத்துபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

மேலும், அதே பகுதியைச் சோ்ந்த 3 போ் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தங்களது உடலில் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்ய முயன்றனா். இதைகண்ட காவல் துறையினா் அவா்களிடமிருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனா்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை தாலுகா காவல் நிலையத்தினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT