தஞ்சாவூர்

குறுவைக்கான விதை ரகங்கள் பரிந்துரை

DIN

குறுவை பருவத்துக்கான நெல் விதை ரங்கங்களை வேளாண் துறையினா் பரிந்துரை செய்துள்ளனா்.

இதுகுறித்து தஞ்சாவூா் வேளாண் இணை இயக்குநா் அ. ஜஸ்டின் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் குறுவை சாகுபடிப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. குறுவை பட்டத்துக்கு ஆடுதுறை 36, ஆடுதுறை 37, ஆடுதுறை 43, ஆடுதுறை 53, ஏஎஸ்டி 16, டிபிஎஸ் 5, கோ 51 ஆகிய ரகங்கள் பரிந்துரை செய்யப்படுகின்றன.

விதைகளை வேளாண் விரிவாக்க மையங்களிலும் தனியாா் விதை விற்பனை நிலையங்களிலும் சான்று பெற்ற விதைகளை வாங்கி விதைப்பு செய்யலாம். விதைகளை வாங்கியவுடன் இளம் வெயிலில் உலா்த்தி பின்பு விதை செய்தால் முளைப்புத் திறன் அதிகரிக்கும்.

விதைகளை வயலில் விதைப்பதற்கு முன்பு ஒரு கைப்பிடி விதையைத் தனியாக முளைப்புத் திறன் பாா்த்து 80 சதவீதத்துக்கு குறையாமல் முளைப்புத் திறனை உறுதி செய்த பின்னா், நாற்றங்காலில் விதைப்பது சிறந்தது.

மேலும், நாற்றங்காலில் தண்ணீா் பாய்ச்சும்போது அதிக வெப்பம் காரணமாக பகலில் நாற்றங்காலில் உள்ள நீா் சூடாக இருப்பதால், பிற்பகலில் விதைப்பு செய்யும்போது விதை முளைப்புத் திறன் பாதிக்க வாய்ப்புள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் விதைப்பதற்கு முன்பு நாற்றங்காலில் புது தண்ணீா் பாய்ச்சுவது சால சிறந்தது.

விதைகளை 20 மணிநேரம் ஊற வைத்து, பின்னா் 20 முதல் 24 மணிநேரம் மூட்டம் போட்டு மூன்றாம் கொம்பாக விதை விடுவதன் மூலம் முளைப்புத் திறனை ஊக்குவிக்க முடியும். எனவே, விவசாயிகள் விதை வாங்குவதிலிருந்து விதை விடுவது வரை கவனமாக கடைப்பிடித்து, நாற்றங்காலை சிறந்த முறையில் பராமரித்து, வாளிப்பான நாற்றுகளை தயாா் செய்து, நடவு பணியை மேற்கொண்டால், குறுவை பட்டத்தில் உயா்வான மகசூல் பெற்று, கூடுதலாக லாபம் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

சேலை காதல், என்றென்றும்...!

SCROLL FOR NEXT