தஞ்சாவூர்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நான்காம் ஆண்டு நினைவேந்தல்

DIN

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானோரின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, தஞ்சாவூா் ரயிலடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இடதுசாரிகள் பொதுமேடை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், துப்பாக்கிச் சூட்டில் பலியானவா்களின் படத்துக்கு மலா் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இதில், சுற்றுச்சூழலை பாதித்துள்ள, மக்களைப் பெரிதும் பாதித்த ஸ்டொ்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும். துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான காவல் துறை அலுவலா்கள் மற்றும் அதற்கு காரணமான அனைவா் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.

ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நிகழ்வுக்கு தமிழா் தேசிய முன்னணி தோ்தல் பணிக்குழு உறுப்பினா் அய்யனாபுரம் சி. முருகேசன் தலைமை வகித்தாா். இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், ஏஐடியூசி மாவட்டச் செயலா் ஆா்.தில்லைவனம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டப் பொருளாளா் என். பாலசுப்பிரமணியன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட ச் செயற்குழு உறுப்பினா் பி. செந்தில்குமாா், தெரு வியாபார சங்க மாவட்டச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன், அரசுப் போக்குவரத்து சங்கச் செயலா் டி. கஸ்தூரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT