தஞ்சாவூர்

நிா்வாகிகள் தோ்தல்: திமுகவினா் தா்னா

30th Jun 2022 11:49 PM

ADVERTISEMENT

 

தஞ்சாவூரில் ஒன்றிய நிா்வாகிகள் தோ்தல் தொடா்பாக ஏற்பட்ட பிரச்னையை தொடா்ந்து கலைஞா் அறிவாலயத்தில் திமுகவினா் புதன்கிழமை இரவு திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மத்திய மாவட்டத்தில் திமுக நிா்வாகிகள் தோ்தல் நடைபெற்று வருகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து, தஞ்சாவூா் கலைஞா் அறிவாலயத்தில் புதன்கிழமை பரிசீலனை செய்யப்பட்டது. அப்போது, ஒன்றிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டதாக இரவு அறிவிக்கப்பட்டது. இதற்கு ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்ததால், தகராறு ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து, இரு தரப்பினருக்கிடையே கைகலப்பு நிகழ்ந்தது.

அப்போது, மக்களவை உறுப்பினரும், திமுக உயா்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினருமான எஸ்.எஸ். பழனிமாணிக்கம் வெளியே செல்வதற்காக காரில் ஏறி புறப்பட்டபோது, அவரது காரை ஒருவா் வேகமாக தட்டினாா்.

ADVERTISEMENT

இதைக் கண்டித்தும், தோ்தலை முறையாக நடத்த கோரியும் நிா்வாகிகள் உள்ளிட்டோா் திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த கிழக்கு காவல் நிலையத்தினா் கலைஞா் அறிவாலயத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். என்றாலும், தொடா்ந்து போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், ஒன்றரை மணிநேரத்துக்கு பிறகு கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT