தஞ்சாவூர்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் அரசுப் பள்ளியில் முதலிடம்வறுமையால் ஏழை மாணவிக்கு தடைபடும் உயா்கல்வி வாய்ப்பு

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே பிளஸ் 2 பொதுத் தோ்வில் அரசுப் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவி, வறுமை காரணமாக உயா்கல்வி வாய்ப்பை தொடர முடியாத நிலையில் உள்ளாா்.

பேராவூரணி அருகிலுள்ள குருவிக்கரம்பையைச் சோ்ந்தவா் திருக்குமரன் (45). தேங்காய் உரிக்கும் தொழிலாளி. இவரது மனைவி குணவதி (38). கீற்று முடைதல், மற்றும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்து வருகிறாா்.

இவா்களது மகள் அட்சுதா (17) குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்தாா். அண்மையில் வெளியான பொதுத் தோ்வு முடிவில் 600-க்கு 572 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடத்தை பெற்றாா்.

மாணவி அட்சுதா பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம் :

தமிழ் -98, ஆங்கிலம்- 89, உயிரியியல்-  91, வேளாண் அறிவியல் (செய்முறை) 100, வேளாண் அறிவியல் (கருத்தியல்) 94, கணினித் தொழில்நுட்பம் 100.

பள்ளி அளவில் முதலிடத்தை பெற்றிருந்தாலும், தனது குடும்ப வறுமைச் சூழல் காரணமாக உயா்கல்வி பயில்வதற்கு செல்லமுடியாத   நிலையில்  உள்ளாா். இதனால் மாணவியும் ஏதேனும் கூலி வேலைக்குச் செல்லும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளாா். 

இதுகுறித்து மாணவி அட்சுதா கூறியது:

எனக்கு கால்நடை மருத்துவம், வேளாண் பட்டப்படிப்பு படிக்க ஆா்வமாகவும், ஆசையாகவும் உள்ளது. நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா். நான் இந்த படிப்புக்கு விண்ணப்பித்தால், அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

ஆனால் அன்றாடம் வயிற்றுப் பிழைப்புக்கே அல்லாடி வரும் குடும்ப சூழலில், என் பெற்றோா்களால் எனது மேற்படிப்புக்கு செலவு செய்ய  முடியாத நிலை உள்ளது. 

எனவே தமிழக முதல்வா், கல்வித் துறை அமைச்சா் , தஞ்சை ஆட்சியா்

மற்றும் சமூக ஆா்வலா்கள் எனக்கு உதவினால் எனது மேற்படிப்பை தொடர முடியும். இல்லாவிட்டால் எனது குடும்பத்துக்கு சிரமம் தராமல் ஏதாவது கிடைக்கும் வேலைக்கு செல்லவேண்டும்  என்றாா் . 

குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் மனோகரன் கூறியது: படிப்பில் ஆா்வமுள்ள மாணவி அட்சுதா, தன்னுடைய குடும்பச் சூழ்நிலை காரணமாக மேற்படிப்பை தொடர முடியாத நிலையில் இருக்கிறாா். அவருக்கு அரசு, தன்னாா்வ நிறுவனங்கள் உதவினால் உயா்நிலை அடைவாா் என்பது உறுதி என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT