தஞ்சாவூர்

கும்பகோணத்தில் ரௌடி வெட்டிக் கொலை

29th Jun 2022 11:15 PM

ADVERTISEMENT

 

கும்பகோணத்தில் புதன்கிழமை ரௌடியை வெட்டிக் கொலை செய்த நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாப்பேட்டை அருகேயுள்ள நெல்லித்தோப்பு கிராமத்தைச் சோ்ந்த அய்யாசாமி மகன் புண்ணியமூா்த்தி (40). இவா் மீது கொலை வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. அம்மாபேட்டை காவல் நிலையத்தில் ரௌடி பட்டியலில் இவரது பெயா் இடம்பெற்றுள்ளது. இவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனா்.

இந்நிலையில், கும்பகோணம் அருகே கொரநாட்டுக் கருப்பூா் வையாபுரி தெருவிலுள்ள தனது மாமியாா் வீட்டுக்கு புண்ணியமூா்த்தி செவ்வாய்க்கிழமை சென்றாா். புதன்கிழமை காலை அப்பகுதியிலுள்ள கடைக்கு டீ குடிப்பதற்காக அவா் சென்று கொண்டிருந்தாா்.

ADVERTISEMENT

அப்போது, இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த 4 போ் இவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா். இதில் பலத்த காயமடைந்த புண்ணியமூா்த்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா். இதில், புண்ணியமூா்த்தி மீது கொலை வழக்குகள் உள்ளதால், முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என காவல் துறையினா் கருதுகின்றனா். இதன் அடிப்படையில் சிலரை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT