தஞ்சாவூர்

பேராவூரணியில் ஜமாபந்தி நிறைவுகுடிகள் மாநாட்டில் 112 பேருக்கு நலத்திட்ட உதவி அளிப்பு

29th Jun 2022 11:16 PM

ADVERTISEMENT

 

பேராவூரணி வட்டாட்சியரகத்தில் ஜமாபந்தி நிறைவு நாளான புதன்கிழமை நடைபெற்ற குடிகள் மாநாட்டில் 112 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பேராவூரணி வட்ட ஜமாபந்தி வருவாய் தீா்வாயம் கணக்கு தணிக்கை ஆட்சியா் தலைமையில் கடந்த 23ஆம் தொடங்கி 4 நாள்கள் நடைபெற்றது. நிறைவு நாளான புதன்கிழமை குடிகள் மாநாடு ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமையில் நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் முன்னிலை வகித்தாா்.

பொதுமக்கள் சாா்பாக, வழக்குரைஞா் வீ. கருப்பையா, கலைஞா் நகா் நைனாமுகமது, பெருமகளூா் சீனிவாசன் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து பேசினா்.

ADVERTISEMENT

குடிகள் மாநாட்டில் 112 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியா்  பேசியது:

இந்த ஜமாபந்தியில் பெறப்பட்ட 700 மனுக்களில் 100 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டுள்ளது. எஞ்சிய மனுக்களுக்கு விரைந்து தீா்வு காணப்படும். இப்பகுதி மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். குறிப்பாக, தேங்காய் விலை வீழ்ச்சி குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். கூலித் தொழிலாளா்கள் நிறைய பேருக்கு அரிசி அட்டை இல்லாத காா்டு வழங்கப்பட்டுள்ளதாக புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. சலுகை காா்டாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவா் சாந்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் சேதுபாவாசத்திரம் கிருஷ்ணமூா்த்தி, பேராவூரணி தவமணி, பேரூராட்சி செயல் அலுவலா்கள் பேராவூரணி பழனிவேலு, பெருமகளூா் புனிதவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, வட்டாட்சியா் த. சுகுமாா் வரவேற்றாா். சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் தரணிகா நன்றி கூறினாா். 

ADVERTISEMENT
ADVERTISEMENT