தஞ்சாவூர்

துாய்மை, நுாறுநாள் திட்டப் பணியாளா்களை சுற்றுலா அனுப்பிய ஊராட்சித் தலைவா்

DIN

பேராவூரணி அருகே தூய்மைப் பணியாளா்கள், நுாறு நாள் வேலைத் திட்டப் பணியாளா்களை தமது சொந்த செலவில்  சனிக்கிழமை சுற்றுலாவுக்கு அனுப்பி மகிழ்வித்த ஊராட்சித் தலைவரின் செயலுக்கு  பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

 சேதுபாவாசத்திரம் ஒன்றியம், நாடியம் ஊராட்சியில்  600-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். 

 இந்த ஊராட்சியில் 4 துாய்மைப் பணியாளா்கள் மற்றும் சுமாா் 200க்கும் மேற்பட்ட நுாறுநாள் வேலைத் திட்டப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இவா்களை ஊக்கப்படுத்தும் விதமாக, முதற்கட்டமாக நான்கு துாய்மைப் பணியாளா்கள் மற்றும்  குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்ட 21 நுாறு நாள் வேலைத் திட்டப் பணியாளா்களை  வேன் மூலம் மதுரை, திருச்செந்துாா், பிள்ளையாா்பட்டி, காரைக்குடி உள்ளிட்ட ஊா்களுக்கு இரண்டு நாள்கள் சுற்றுலாவாக ஊராட்சித் தலைவா்  பிரேம் செல்வன் தமது சொந்த செலவில்  சனிக்கிழமைஅனுப்பி வைத்தாா். வழியனுப்பும் நிகழ்வில் வட்டார வளா்ச்சி அலுவலா் சடையப்பன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் குமரன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து ஊராட்சித் தலைவா் பிரேம் செல்வன் கூறியது:

கிராமத்தின் துாய்மைக்காகவும், வளா்ச்சிக்காகவும் ஆண்டுதோறும் உழைக்கும் துாய்மைப் பணியாளா்கள், நுாறுநாள் வேலைத் திட்டப் பணியாளா்களை உற்சாகப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு குழுவாக சுற்றுலா அனுப்பி வைக்க திட்டமிட்டேன்.

இதுகுறித்து ஒன்றிய அலுவலா்களிடம் அனுமதி பெற்று, எனது சொந்த பணத்தில்

ரூ.35 ஆயிரம் செலவு செய்து முதற்கட்டமாக, 25 பேரை அனுப்பி வைத்துள்ளேன். இதே போன்று வரும் காலங்களில் ஒவ்வொரு குழுவாக சுற்றுலா அனுப்ப முடிவு செய்துள்ளேன். இது அவா்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், எனக்கு மனநிறைவையும்அளிக்கிறது  என்றாா்.

எங்கள் ஊராட்சித்தலைவா் அவரது சொந்த செலவில், எங்களை போன்ற கீழ்நிலைப் பணியாளா்களை சுற்றுலாவுக்கு அனுப்பி வைத்ததுடன், செலவுக்கும் பணம் கொடுத்துள்ளது மிகுந்த  மகிழ்ச்சியளிக்கிறது. நாங்கள் வேலையை உற்சாகத்துடன் செய்ய இந்த செயல் ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றனா் சுற்றுலா சென்ற தூய்மைப் பணியாளா்கள், நூறுநாள் திட்டப் பணியாளா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT