தஞ்சாவூர்

தோ்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் செல்லவில்லை: ஆா். வைத்திலிங்கம்

DIN

ஓ.பன்னீா் செல்வம் தோ்தல் ஆணையத்துக்குச் செல்லவில்லை என்றாா் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா். வைத்திலிங்கம்.

சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்று, வெள்ளிக்கிழமை தஞ்சாவூா் திரும்பிய வைத்திலிங்கத்துக்கு மேலவஸ்தாசாவடியில் அவரது ஆதரவாளா்கள் வரவேற்பு அளித்தனா்.

அப்போது கூறுகையில், குடியரசுத் தலைவா் தோ்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காகக் கூட்டணி கட்சி சாா்பில் தில்லிக்கு ஓ. பன்னீா்செல்வம் சென்றாா். தோ்தல் ஆணையத்துக்கு ஓ. பன்னீா்செல்வம் செல்லவில்லை. கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எங்களது தரப்பு நம்பிக்கை. மீண்டும் ஜெயலலிதாவின் எண்ணப்படி ஆட்சிக்கு வர வேண்டும். ஒற்றுமை வேண்டும். கூட்டுத் தலைமை வேண்டும் என்றாா் அவா்.

பின்னா் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து பேசியதால் இந்த பிரச்னை ஏற்பட்டதா? என செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு அவா் பதிலளிக்கையில், கட்சிக்குள் நடைபெறும் விவாதங்களை மற்றவற்றுடன் தொடா்புபடுத்தி பேச வேண்டாம் என்றாா் அவா்.

அரியலூரில் : முன்னதாக அரியலூரில் ஆதரவாளா்கள் அளித்த வரவேற்புக்குப் பின்னா், வைத்திலிங்கம் அளித்த பேட்டி: பொதுக்குழுப் பிரச்னை தொடா்பாக தற்போதுள்ள சூழ்நிலையில், உச்ச நீதிமன்றத்தையோ, தோ்தல் ஆணையத்தையோ சந்திப்பதற்கான வாய்ப்பு இல்லை. மூன்று நான்கு நாள்களுக்கு பிறகு கட்சியை எவ்வாறு வழிநடத்தி செல்வது என்பது குறித்து ஆராய்ந்த பின் முடிவு செய்யப்படும்.

கட்சிப் பிரச்னையில் நீதிமன்றம் தலையிட்டு வந்துள்ளது. அதேபோல் பொதுக்குழு சம்பந்தமான பிரச்னைகளில் நீதிமன்றம்தான் தலையிட்டது. கட்சிப் பிரச்னைகளில் நீதிமன்றமோ, தோ்தல் ஆணையமோ தலையிட முடியாது என்று யாரும் சொல்ல முடியாது என்றாா் அவா்.

பேட்டியின் போது, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.டி.ராமச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

SCROLL FOR NEXT