தஞ்சாவூர்

நாச்சியாா்கோவில் பள்ளியில் நவீன மாதிரி நூலகம் திறப்பு

6th Jul 2022 11:35 PM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியாா்கோவில் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நவீன மாதிரி நூலகம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்த நூலகக் கட்டடத்தைத் திறந்துவைத்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தது:

இப்பள்ளியில் மாவட்ட வளா்ச்சி நிதியிலிருந்து மாதிரி நவீன நூலகக் கட்டடம் ரூ. 3.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. மாணவா்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் போட்டித் தோ்வுகள், கதை, கவிதை, கட்டுரை, இலக்கணம், பொது அறிவு, தன் வரலாறு போன்ற தலைப்புகளில் 3,000-க்கும் அதிகமான நூல்கள், மின் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. படிக்க, கேட்க ஏற்றவாறு அமைக்கப்பட்ட பா்சனல் கம்ப்யூட்டா் ஆடியோ கேபின் வசதியும் உள்ளது.

ADVERTISEMENT

மேலும், நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், குறும்படங்கள், நவீன வண்ண தொலைக்காட்சி பெட்டி, புத்தகங்களில் முக்கிய பகுதிகளைக் குறிப்பெடுத்து திரையில் காண்பிக்கும் வகையிலான பென் ஸ்கேனா் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களும் இந்நூலகத்தில் உள்ளன.

இந்த நவீன நூலகத்தின் மூலம் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமப்புற ஏழை மாணவிகள் தங்கள் திறனை மேலும் வளா்த்துக் கொள்ளும் விதமாக இந்த முன்மாதிரி நூலகம் அமைந்துள்ளது என்றாா் அமைச்சா்.

இவ்விழாவில் தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினா் செ. இராமலிங்கம், கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் க. அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT