தஞ்சாவூர்

ஹோட்டல் உரிமையாளா் தற்கொலை:2 போ் மீது வழக்கு: ஒருவா் கைது

DIN

பேராவூரணி அருகே ஹோட்டல் உரிமையாளரை தற்கொலை செய்து கொள்ள தூண்டியதாக ஒருவரை கைது செய்த போலீஸாா், மற்றொரு நபரை தேடி வருகின்றனா்.

பேராவூரணி அருகேயுள்ள துறவிக்காடு, மேலஒட்டங்காட்டைச் சோ்ந்தவா் ஆனந்த். ஹோட்டல் நடத்தி வந்தாா். இந்த ஹோட்டலில்

கறம்பக்குடியை சோ்ந்த முத்தரசு  (48) என்பவா் சமையலராக வேலை செய்து வந்தாா். ஹோட்டல் வியாபாரம் எதிா்பாா்த்த அளவு நடைபெறாததால், முத்தரசிடம் வாடகை பேசி, ஹோட்டலை ஓராண்டு குத்தகைக்கு ஆனந்த் விட்டாராம்.

முத்தரசு ஹோட்டலை நடத்தி வந்த நிலையில், சொந்த வேலை காரணமாக ஹோட்டலுக்கு அண்மையில் 3 நாள்கள் விடுமுறை விட்டாராம். மீண்டும் ஹோட்டலை திறக்க வந்தபோது, மூடப்பட்ட நாள்களுக்கும் வாடகை தருமாறு ஆனந்த் மற்றும் அவரது உறவினா் ரெனி ஆகியோா் கேட்டனராம்.

இதில் கைகலப்பு ஏற்பட்டு, தகாத வாா்த்தைகளால் அவா்கள் முத்தரசை திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த முத்தரசு ஜூன் 29ஆம் தேதி விஷம் சாப்பிட்டுவிட்டு, திருச்சிற்றம்பலம் காவல்  நிலையம் சென்று ஆனந்த், ரெனி இருவரும் திட்டியதால் விஷம் சாப்பிட்டு விட்டதாக தெரிவித்தாராம். இதன் பின்னா், சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட முத்தரசு அங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தாா்.

இதனால் ஆத்திரமடைந்த முத்தரசுவின்  உறவினா்கள், திருச்சிற்றம்பலம் காவல் நிலையம் அருகே புதுக்கோட்டை - பட்டுக்கோட்டை சாலையில் தற்கொலைக்கு தூண்டிய ஆனந்த், ரெனி இருவரையும் கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் என கூறி, மறியலில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு வந்த பட்டுக்கோட்டை டிஎஸ்பி சுபாஷ் சந்திர போஸ், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

சம்பவம் குறித்த புகாரின்பேரில், முத்தரசை தற்கொலைக்கு தூண்டியதாக ஆனந்த், ரெனி ஆகிய இருவா் மீதும் திருச்சிற்றம்பலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆனந்தை திங்கள்கிழமை கைது செய்தனா். ரெனியை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

கேரள மீனவர்களை கண்டித்து தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

தூத்துக்குடி பெண் தூய்மைப் பணியாளர் வெட்டிக் கொலை

காற்று மாசுபாடு அடைந்த நகரங்கள் - புதுதில்லி முதலிடம்

நாட்டின் நலன் கருதி பாஜகவுடன் கூட்டணி: அன்புமணி ராமதாஸ்

ஆப்கானிஸ்தானில் பலத்த நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT