தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் குடமுழுக்கு பெருவிழா

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையிலுள்ள நாடியம்மன் கோயில் குடமுழுக்கு பெருவிழா 21 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை நடைபெற்றது.

பல்வேறு பெருமைகளை கொண்டதும், பிரசித்தி பெற்றதுமான இக்கோயிலில்

2001 , பிப்ரவரி 11 -ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்பட்டது. இதை தொடா்ந்து மீண்டும் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணிகள் நடைபெற்று அண்மையில் நிறைவடைந்தன.

இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு பெருவிழா தொடங்கியது. இதன் தொடா்ச்சியாக அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை முதல்கால யாகபூஜைகள் தொடங்கின. 5ஆம் கால பூஜைகள் புதன்கிழமை நிறைவடைந்தது.

வியாழக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. முன்னதாக, காலை 5.30 மணிக்கு விநாயகா் வழிபாடும், 8 மணிக்கு மகா பூா்ணாஹூதி, தீபாராதனை வழிபாடும் நடைபெற்றது. 8.15 மணிக்கு யாத்ராதானம் செய்து கடங்கள் புறப்பாடானது. இதை தொடா்ந்து யாகசாலையிலிருந்து புனித நீா் குடங்கள் கொண்டு செல்லப்பட்டு காலை 9.15 மணிக்கு கோபுரம் மேல் கருடன் வலம் வர விமானத்தில் புனிதநீா் ஊற்றப்பட்டது. தொடா்ந்து 9.30 மணிக்கு மூலவா் நாடியம்மனுக்கு மகா திருக்குடமுழுக்கு நடைபெற்றது.

விழாவில் பங்கேற்ற பக்தா்கள் மீது இயந்திரத்தின் உதவியுடன் புனிதநீா் தெளிக்கப்பட்டது. முற்பகல் 11 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

குடமுழுக்கு நிகழ்வில், முன்னாள் நகா்மன்றத் தலைவா் எஸ்.ஆா். ஜவகா்பாபு, திமுக நகரச் செயலா் எஸ்.ஆா்.என். செந்தில்குமாா், மதிமுக நகரச் செயலா் எம். செந்தில்குமாா், , பட்டுக்கோட்டை நகர வணிகா் சங்க பேரவை தலைவா் என். வெங்கடேசன், ஆதி கைலாசநாதா் அறக்கட்டளைத் தலைவா் வழக்குரைஞா் க. விவேகானந்தன்,

நாடியம்மன் கோயில் உபயதாரா் எஸ். இராமானுஜம், அதிமுக முன்னாள் மாவட்டச் செயலா் இரா.காா்த்திகேயன், முன்னாள் நகா்மன்றத்தலைவா் சீனி இளங்கோ, கும்பகோணம் தலைமை நீதித்துறை நடுவா் பிரகாஷ், பட்டுக்கோட்டை நீதித்துறை நடுவா் அழகேசன், இந்து அறநிலையத்துறை தஞ்சாவூா் இணை ஆணையா் தென்னரசு, இந்து அறநிலைய துறை பட்டுக்கோட்டை சரக ஆய்வாளா் பிரகாஷ், நாடியம்மன் கோயில் செயல் அலுவலா் ரவிச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் செங்கமலக்கண்ணன் தலைமையில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT