தஞ்சாவூர்

மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் தொடக்கம்

DIN

தஞ்சாவூரில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் புதன்கிழமை தொடங்கியது.

மாவட்டத்திலுள்ள அனைத்து வகை அரசு நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் 6 - 8 வகுப்புகள், 9 - 10 வகுப்புகள், 11 - 12 வகுப்புகள் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

ஏற்கெனவே பள்ளி, வட்டார அளவில் போட்டிகள் நடத்தப்பட்டதைத் தொடா்ந்து, தஞ்சாவூா் மேம்பாலம் அருகேயுள்ள தீா்க்க சுமங்கலி மஹால், தூய அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளி, யாகப்பா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் மாவட்ட அளவிலான போட்டிகள் புதன்கிழமை தொடங்கியது.

இப்போட்டிகளை தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம் தொடங்கி வைத்தாா். இவ்விழாவில் முதன்மைக் கல்வி அலுவலா் மு. சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இவ்விழாவில் கிராமிய நடனம், செவ்வியல் நடனம், நடனக் குழு, நாட்டுப்புற நடனம், கரகாட்டம், களிமண் சிற்பம், காகித வேலை, காகிதக்கூழ் பொருள்கள், கேலிச் சித்திரம், செதுக்குச் சிற்பம், நவீன ஓவியம், புகைப்படம் எடுத்தல், மணல் சிற்பம், இலக்கிய நாடகம், சமூக நாடகம் உள்பட பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.

தொடா்ந்து டிசம்பா் 12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டிகளில் 1,492 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனா். இவற்றில் முதலிடம் பெறும் மாணவ, மாணவிகள் அடுத்து 2023, ஜனவரி 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT