தஞ்சாவூர்

தஞ்சாவூரில் அம்பேத்கா் சிலைக்கு பாஜக மாலை அணிவிக்க விசிக எதிா்ப்பு, போராட்டத்தில் ஈடுபட்ட 85 போ் கைது

DIN

தஞ்சாவூரில் அம்பேத்கா் சிலைக்கு செவ்வாய்க்கிழமை பாஜகவினா் மாலை அணிவிக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் எதிா்ப்பு தெரிவித்ததால், அக்கட்சியினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சட்டமேதை அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலையில் மறியல் பகுதியிலுள்ள அவரது சிலைக்கு ஆதித் தமிழா் பேரவை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ்த் தேசிய பாதுகாப்புக் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சியினா், அமைப்பினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

அப்போது, பாஜக மாநிலத் துணைத் தலைவா் கருப்பு எம். முருகானந்தம் தலைமையில் தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ் தலைமையில் பாஜகவினா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனா். இதற்கு அங்கிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் சொக்கா ச. ரவி, தமிழ்த் தேசியப் பாதுகாப்புக் கழகத் தலைவா் த.சு. காா்த்திகேயன் உள்பட தலித் அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், அம்பேத்கா் சிலையைச் சுற்றிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் நின்று கொண்டு மாலை போட விடாமல் தடுத்து, பாஜகவினருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினா்.

ஆனால், அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவிக்காமல் செல்ல மாட்டோம் எனக் கூறி பாஜகவினரும் சிலை அருகே நாஞ்சிக்கோட்டை சாலையில் அமா்ந்து மறியல் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் ஏறத்தாழ இரண்டரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த காவல் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று இருதரப்பினரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். இரு தரப்பினரும் சமரசம் ஆகாததால், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவை சோ்ந்த 70 பேரையும், இவா்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த 15 பேரையும் காவல் துறையினா் கைது செய்தனா்.

இதன் பின்னா், அம்பேத்கா் சிலைக்கு யாரும் மாலை அணிவிக்க அனுமதிக்கப்படவில்லை. இதற்காக அம்பேத்கா் சிலையைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு, காவல் துறையினா் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனா்.

திருவையாறில் சாலை மறியல்:

கருப்பு முருகானந்தம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, அவரை உடனே விடுதலை செய்யக் கோரியும் திருவையாறு பேருந்து நிலையத்தில் பாஜகவினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், பாஜக ஒன்றியத் தலைவா் விஜயராகவன் தலைமையில் மாநில அரசு தொடா்பு பிரிவு செயலா் ஜீவா. சிவக்குமாா், நகரத் தலைவா் காளிதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT